Monday, November 24, 2008

ஒரு ஒருமை இருமையாகிறது

எங்கள் உரையாடல்களில்
இனி உனக்கு பதில்
நீங்கள்..!

இன்று ஒரு ஒருமை
இருமையாகிறது
வாழ்த்துக்களோ
பன்மையாய்...!

பூவுக்கு முன்னால்
பூ வாசனையாய்
அதன் வாழ்த்துக்கள்..!

நேற்றின் நாளையின்
சார்பில் ஒன்று சேர்ந்தன
இன்றின் வாழ்த்துக்கள்

இடம் பிடித்து விட்டோம்!
வாழ்த்துக்களின் வரிசையில்
நானும் நண்பர்களும்..!

எத்தனை குரல்கள்?
எத்தனை பதில்கள்?
வாழ்த்துக்களின்
வரிசைப் பதிவில்...!

இல்லற வாழ்க்கையில்
பிள்ளையாருக்கும் ஆசை?
உங்களைப் பார்த்து..!

சித்தப்பா ரொம்ப
அழகா இருக்கிறார்..!
....
சித்தி பக்கத்தில் இருந்தால்..!

உண்மைதான்...!
கொள்ளை அழகு
இருவரும்
இணைந்திருந்தால்..!

புத்திசாலி..!
நீ கேட்ட திருமண பரிசோ?
தமிழ்..!

இல்வாழ்க்கை
இனிமையாக வழி?
கொஞ்ச(ம்) முயற்சி செய்..!

ம்ம்ம்...
உங்கள் இரு குரலும்
திருக்குற(ர)லாய்
இருக்க, ஒலிக்க

அத்தனைக் குரல்களையும்
மொத்தமாய் சேர்த்து
வாழ்த்தும்


அன்பன்
உன் நண்பன்

ப்ராக்ரஸ் ரிப்போர்ட்

நெஞ்சுக்குள்
மையம் கொண்டது
பயப்புயல்..!

இடி, மின்னல்,
அர்ச்சனை பேய்மழை
அத்தனையும்
என்மேல்

ஹோம் வொர்க் வாய்க்கால்களையும்
ஹார்ட் வொர்க் ஏரிகளையும்
தூர்வாராததே காரணம்
அத்தனை அழிவுக்கும்

மனப்பாட மெஷினாய்
இருந்துவிட்டதால்
இயற்கை கேள்விகளைப்
புரட்டும்போது
பதில்கள்
கேள்விக்குறியாய்..!
..
எங்கே போயின?
மழைநீர் சேகரிப்பாய் எழுதிய
பதில்கள்...!

அத்தனை வொர்க்குகளையும்
அம்மாவே செய்துவிட்டு
என்னிடம் எதிர்ப்பார்ப்பது
வெறும்
மதிப்பெண்கள் மட்டுமே!

கரையைக் கடந்தது
புயல்...
அரைமணி நேர
வேன் பயனத்தில் மனமெங்கும்
பாதிப்புகள்

உணவுப் பொட்டலங்களாய்
வந்து விழுந்தன
ஆறுதல் வார்த்தைகள்...!

இன்னைக்குப்
ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டாமே..?
அம்மாவின் குரல்.
வானிலை அறிக்கையில்
அடுத்த புயல்..!