Monday, November 24, 2008

ஒரு ஒருமை இருமையாகிறது

எங்கள் உரையாடல்களில்
இனி உனக்கு பதில்
நீங்கள்..!

இன்று ஒரு ஒருமை
இருமையாகிறது
வாழ்த்துக்களோ
பன்மையாய்...!

பூவுக்கு முன்னால்
பூ வாசனையாய்
அதன் வாழ்த்துக்கள்..!

நேற்றின் நாளையின்
சார்பில் ஒன்று சேர்ந்தன
இன்றின் வாழ்த்துக்கள்

இடம் பிடித்து விட்டோம்!
வாழ்த்துக்களின் வரிசையில்
நானும் நண்பர்களும்..!

எத்தனை குரல்கள்?
எத்தனை பதில்கள்?
வாழ்த்துக்களின்
வரிசைப் பதிவில்...!

இல்லற வாழ்க்கையில்
பிள்ளையாருக்கும் ஆசை?
உங்களைப் பார்த்து..!

சித்தப்பா ரொம்ப
அழகா இருக்கிறார்..!
....
சித்தி பக்கத்தில் இருந்தால்..!

உண்மைதான்...!
கொள்ளை அழகு
இருவரும்
இணைந்திருந்தால்..!

புத்திசாலி..!
நீ கேட்ட திருமண பரிசோ?
தமிழ்..!

இல்வாழ்க்கை
இனிமையாக வழி?
கொஞ்ச(ம்) முயற்சி செய்..!

ம்ம்ம்...
உங்கள் இரு குரலும்
திருக்குற(ர)லாய்
இருக்க, ஒலிக்க

அத்தனைக் குரல்களையும்
மொத்தமாய் சேர்த்து
வாழ்த்தும்


அன்பன்
உன் நண்பன்

ப்ராக்ரஸ் ரிப்போர்ட்

நெஞ்சுக்குள்
மையம் கொண்டது
பயப்புயல்..!

இடி, மின்னல்,
அர்ச்சனை பேய்மழை
அத்தனையும்
என்மேல்

ஹோம் வொர்க் வாய்க்கால்களையும்
ஹார்ட் வொர்க் ஏரிகளையும்
தூர்வாராததே காரணம்
அத்தனை அழிவுக்கும்

மனப்பாட மெஷினாய்
இருந்துவிட்டதால்
இயற்கை கேள்விகளைப்
புரட்டும்போது
பதில்கள்
கேள்விக்குறியாய்..!
..
எங்கே போயின?
மழைநீர் சேகரிப்பாய் எழுதிய
பதில்கள்...!

அத்தனை வொர்க்குகளையும்
அம்மாவே செய்துவிட்டு
என்னிடம் எதிர்ப்பார்ப்பது
வெறும்
மதிப்பெண்கள் மட்டுமே!

கரையைக் கடந்தது
புயல்...
அரைமணி நேர
வேன் பயனத்தில் மனமெங்கும்
பாதிப்புகள்

உணவுப் பொட்டலங்களாய்
வந்து விழுந்தன
ஆறுதல் வார்த்தைகள்...!

இன்னைக்குப்
ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டாமே..?
அம்மாவின் குரல்.
வானிலை அறிக்கையில்
அடுத்த புயல்..!

Wednesday, September 24, 2008

சிங்கமலை..!

"டம டம டம டம .... டம டம டம டம...." முரசறையும் சத்தத்தைக் கேட்டு அனைவரும் தத்தமது இருப்பிடங்களில் இருந்து வெளியே வந்தார்கள்.



"... இதனால் சிங்கமலையில் வசிக்கும் அனைவருக்கும் அறிவிக்கப் படுவது என்னவென்றால்....." எல்லோருடைய காதுகளும் கூர்மையாயின. முரசைவூன் அறிவிக்கபோவது னது நீண்ட நாள் கோரிக்கையா அல்லது வேறெதாவதா..?! " நமது குடிமாக்கள் அடிக்கடி காணாமல் போவது குறித்தும் அந்நியர்களால் விடம் வைத்துக் கொல்லப்படுவது குறித்தும் விசாரித்து ஆவன செய்ய, நமது தலைவர், மாக்கள் பெருமன்றத்தைக் வருகின்ற ஞாயிறு அன்று கூட்டியுள்ளார். அனைவரும் கலந்து கொள்ளும்படி அறிவிக்கப்படுகிறது." "டம டம டம டம .... டம டம டம டம...."

" டம டம டம டம.... டம டம டம டம...."

சிங்கமலை வனப்பகுதில் மட்டுமே காணப்படுகின்ற அரிய வகைக் குரங்கான 'செம்மந்தியார்' தாவியும் குதித்தும், தனது தலையை ஆட்டியும் சொல்லுகின்ற, அழகை ரசிக்கின்ற மனநிலையில் அப்போது யாரும் இல்லை என்பது, செய்தியை முணுமுணுத்தபடி கேட்டுசெல்லும் மாக்களின் செயலே உணர்த்தியது.

******************************


சிங்கராசா ஒரு பெரியகல்லின் மேல் முன்னங்கால்களை ஊன்றி, கம்பீரமாகஉட்கார்ந்திருந்தார். முகத்தில் கவலை லேசாக எட்டிப் பார்த்தது. அவருக்கு முன்னே இருபுறமும் அரைவட்ட வடிவில் இருந்த சிறுசிறு கற்களில் அவரதுபரிவாரங்களான.., அமைச்சர் 'நரியார்' , சேனாதிபதி 'புலியார்', தனாதிபதி யானையார்', மத்தியஸ்தர் 'கரடியார்' முதலானோர் அமர்ந்திருந்தனர். அவர்களின் முகங்களில் ஒரு இனம் புரியாத குழப்பம் பரவி இருந்தது. நடுவில்இருந்த பொட்டலில் சிங்கமலை பகுதில் வசிக்கும் மாக்களின் பிரதிநிதிகள் குழுமிஇருந்தனர்.

கருவூல அதிகாரியான யானையாரின் உறவுகளின், இனத்தினரின் தந்தங்கள்பறிபோன போதும்..! புளியாரின் பெரிய மைத்துனரின் சின்ன மாப்பிள்ளையின்அக்கா மகன் அவனது தோலுக்காக வேட்டையாடப்பட்ட போதும்..! விளை நிலங்களை நாசம் செய்வதாகவும், ஊருக்குள் புகுந்துவிட்டதாகவும் வீண்பழிசுமத்தி தனது குடிமக்கள் விடம் வைத்துக் கொல்லப்பட்ட போதும்...! அவ்வளவுஏன்... காரணமே இல்லாமல் பலர் காணாமல் போனபோதும்...! கொஞ்சங்கூடவருந்தாமல்.. சரி சரி விசாரிக்கிறேன் என்று கூறியே காலம் கடத்தியசிங்கராசா.., வேட்டைக்கு சென்ற சிங்கராணியை.. இரண்டு நாட்களாககாணவில்லை என்றதும் உடனே மாக்கள் பெருமன்றத்தை கூட்டிவிட்டார்.

சிங்கராணி காணாமல் போனதைக் குறித்து துக்கம் விசாரிப்பதா...?! அல்லது காட்டில் அந்நிய தீவிரவாதிகளால் வலைவிரித்தும், கூண்டு வைத்தும், குழிவேட்டியும், குண்டு வெடித்தும் பயங்கரமாக கொல்லப் படுகின்ற மாக்களின் பாதுகாப்புக்குறித்தும், பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் பேசுவதா..?!

எதை முதலில் ஆரம்பிப்பது... எனத்தெரியாமல் எல்லோரும் அமைதியாய்இருந்தனர்.

"க்கும்... க்ம்.." மெதுவாக தொண்டையை சரிசெய்துக் கொண்ட சிங்கராசா.., ஆரம்பிக்க சொல்லி நரியாருக்கு சைகை செய்தார்.


உடனே அதற்காகவே காத்திருந்து போல்.. " மேன்மை தாங்கிய..." என்றுஆரம்பித்த நரியார்.., சிங்கராசாவின் மேதாவிலாசங்ககளை ஒரு அரைமணிநேரம் ஒன்று விடாமல் சொல்லி முடித்தார். உடனே செம்மந்தியாரைஓரக்கண்ணால் பார்த்து தான் எதையும் விட்டு விடவில்லையே.. என்பதையும்உறுதி படுத்திக் கொண்டு தொடர்ந்தார்... " பிரச்சனையின் முக்கியத்துவம் கருதிநேரடியாகவே விசயத்திற்கு வருகிறேன். நமது குடிமாக்கள் பயங்கரவாதிகளின் நாச வேலைகளால் கொல்லப்படுவது குறித்தும், நமது உடைமைகளும் காட்டின்செல்வங்களும் கொள்ளையடிக்கப்படுவது குறித்தும், நமது எல்லைப்பகுதிகள்விவசாய நிலங்கள் என்ற பெயரில் ஆக்ரமிக்கப்பட்டு... பிறகு குடியிருப்புகளாகமாற்றப்படுவது குறித்தும்.அப்புறம்... விவாதித்து முடிவெடுக்க மாக்கள் நலனில்மிகுந்த அக்கறை கொண்ட நமது தலைவரின் உத்தரவின் இந்த பெருமன்றம் கூட்டப்பட்டிருக்கிறதே தவிர .., சிங்கமகாராணி காணாமல் போனதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை."


சிங்கராசா முறைப்பதை உணர்ந்த நரியார் உடனே சுதாரித்துக் கொண்டார். "சிங்கமலையில் காணாமல் போனவர்கள், போனவைகள் குறித்துகணக்கெடுக்க, நமது கருவூல அதிகாரியான யானையார் தலைமையில் இரண்டுவருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டு, மூன்று முறை நீட்டிக்கப்பட்ட மூன்று நபர்குழு, சென்றவாரம்தான் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதுதான் தாமதத்திற்கு காரணமே அன்றி வேறில்லை." என்றபடி தனது தந்தத்தை இழந்துபரிதாபமாய் நின்றிருந்த யானையாரைப் பார்த்தார் நரியார்.

" ஏன் எல்லோரும் யானையாரை அப்படி பார்க்கிறீர்கள். அவர் கருவூலஅதிகாரியாக இருப்பதால்தான் அவர் மற்றும் அவரது இனத்தாரின் உடல்பெருத்திருக்கிறது. அவர் பொய்க்கணக்கு எழுதியதால்தான் அவரது தந்தம்பறிபோனது. என்பன போன்ற வீண்வதந்திகளை மறந்து விட்டு..." என்ற நரியார் . . உடனே யானையார் எழுவதைப் பாரத்துவிட்டு, அவசர அவசரமாக "தற்போதைய பிரச்சனைக்கு ஒருவழியை காண விவாதத்தை துவக்கி, முதலில் யானையாரை பேச அழைக்கிறேன்" என்று வேகவேகமாக மணியைஆட்டி மன்றத்தை துவக்கினார்.

இரண்டுமணி நேரம் நீ.......................................................ண்ட கலந்துரையாடலுக்குப்பிறகு, மாக்களின் எதிரிகளான மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதற்கு சிங்க மகாராசாவின் தலைமையில் ஒரு குழுவும்அமைக்கப்பட்டது. சிங்கமகாராசாவுக்கு வனநாயகத்தில் உள்ள நம்பிக்கையை பெருமையாக பேசியபடியே மன்றம் கலைந்தது.

*****************************************************
தொடரும் ....


Saturday, September 20, 2008

விடை தேடும் வினாக்கள் விளையாடும் பொது மேடை:

ஆர்ப்பரிக்கும் அலைகடலைப் போல அயராது, வலைகடலில் தத்தமது எண்ணங்களால் முத்தெடுக்கும் எண்ணற்ற உள்ளங்களைக் கண்டு, மனம் விரும்பி, தனக்கென்றும் ஒரு வலையை ஆக்கிக்கொண்ட இச்சிறுவனின் வரிகளுக்கு வரி விதிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

விடை தேடும் வினாக்கள் விளையாடும் பொது மேடை:

உலகம் தோன்றிய காலம் தொட்டே உயிர்களின் வாழ்வாதரத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இயற்க்கை வகுத்த ஒவ்வொரு விதிகளும் காலப்போக்கில்
மானுட தேவைக்காகவும், சுய நலத்திற்காகவும் மாற்றப்பட்டன அல்லது வளைக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட விளைச்சல்களை மானுடமும் விளைவுகளை அனைத்து உயிர்களும் அனுபவிப்பது சரியா?

உங்கள் எண்ணங்களை எழுதுங்களேன்